ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள்

சாந்திப்பிரியா

ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த அக்கல்கோட் , பகவான் தத்தாத்ரேயர் வம்சத்தில் அவதரித்த மாபெரும் யோகா புருஷர்.   பகவான் தத்தாத்ரேயரின் நான்காம் அவதாரம். பகவான் தத்தாத்ரேயர் வம்சத்தில் வெளிவந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் மறைவிற்கு பின் தோன்றியவர். ஸ்ரீ ஸ்மர்த்த ஸ்வாமிகளை ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்வாமிகளின் அவதாரம் என்றும் கூறுகின்றார்கள். 

அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளின் பெற்றோர்கள் குறித்தோ, அவர் பிறந்த இடத்தை குறித்தோ சரியான தகவல்கள் இல்லை. மஹாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீரடி ஸ்ரீ சாயிபாபா மற்றும் ஸ்ரீ கஜானந்த மஹராஜ் போன்றவர்களை போலவே அவர் பிறப்பும் மர்மம் நிறைந்த ஒன்றாக உள்ளது. ஒருமுறை அவருடைய சீடர் அவர் பிறப்பு குறித்து கேட்டபோது தாம் ஒரு ஆலமரத்தில் இருந்து தோன்றியதாக அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் கூறினார் என கதை உள்ளது.

ஒரு சிலரின் கூற்றின்படி பல லீலைகளை நடத்தி மக்களுக்கு நன்மைகள் பலவும் செய்த பின் ஸ்ரீ ந்ருஸிம்ம சரஸ்வதி ஸ்வாமிகள் இமயமலையின் அடிவாரத்துக்கு சென்று அங்கு மஹா சமாதியில் அமர்ந்து கொண்டு 300 ஆண்டுகள் கடும் தவத்தில் இருந்தார். அப்படித் தவம் இருக்கையில் அவரைச் சுற்றிக் கரையான் புற்று வைத்து விட, அவர் தன்னைச் சுற்றிலும் கறையான் புற்று வைத்திருப்பது கூடத் தெரியாமல் அந்தப் புற்றுக்குள் தவம் இருந்தார். அவர் அந்த மண் புற்றுக்குள் இருப்பது வெளியில் மற்றவர்களுக்கும் தெரியாது. ஒருநாள் காட்டில் மரங்களை வெட்டுபவன் மரங்களை வெட்டிக் கொண்டு இருந்த பொழுது   எதேச்சையாக அவர் தவமிருந்த புற்றின் மீது அவனது கோடாலி விழுந்து விட அந்தப் புற்று உடைந்த போய் அவர் தவமும் கலைந்தது. அதில் இருந்து ஒன்றுமே நடக்காததை போல வெளிவந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகள், புதிய உருவிலான ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக மாறி இருந்தார். அந்த மரம் வெட்டுபவனிடம் மிகவும் சாந்தமாக ‘தான் மீண்டும் தனது ஆன்மீக பயணத்தை தொடர வேண்டும் என்று கடவுள் விரும்பியதால் தவத்தை கலைத்து விட்டு வெளி வந்ததாக’ கூறினாராம்.  

முதன் முதலில் அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் ஷோலாப்பூரில் உள்ள அக்கல்கோட்டில் உள்ள கண்டோபா ஆலயத்தின் அருகில்தான் காணப்பட்டாராம். அதற்கு முன்னரே அவர் ஹிமாலய, சீனா, திபெத், பூரி, பனாரஸ், ஹரித்வார், கிர்னார் மற்றும் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கும் சென்று விட்டு வந்திருந்தார் என்பதாக கூறுகின்றார்கள்

ஸ்வாமிகள் அனைத்து மதத்தினரிடமும் ஒன்றாகவே பழகினார். முக்கியமாக சமுதாயத்தில் கீழ்த்தரப்பட்ட மக்கள், ஏழைகள் மற்றும் தனது உதவியை நாடியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். மொஹரம் மற்றும் இந்துக்களின் பண்டிகைகளான தசரா போன்றவற்றை கொண்டாடினார். 

ராம்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த ராவாஜி என்பவர் ஸ்வாமிகளின் பக்தர். ஒரு முறை ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் அந்த ஊருக்கு வருகை தந்த பொழுது தன் வீட்டில் ஸ்வாமிகளை தரிசிக்க 40-50 பக்தர்கள் வரக் கூடும் என நினைத்து ஸ்வாமிகளை கௌரவிக்கும் விதத்தில் ஐம்பது பேர்கள் சாப்பிடக் கூடிய அளவில் சாப்பாடு தயாரித்து வைத்து இருந்தார். ஆனால் ஸ்வாமிகள் அங்கு வரும் செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவி பக்கத்து கிராமங்களில் இருந்த மக்கள் எல்லாம் வந்து கூடிவிட்டார்கள். ராவாஜி செய்வதறியாது கதி கலங்கி நின்றான். ஆனால் அதைக் கண்ட அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் ‘கவலைப் படாதே நான் இருக்க பயம் ஏன்’ என்று கூறி விட்டு இரண்டு பாத்திரங்களை கொண்டு வரச் சொல்லி விட்டு அதில் பகவான் கண்டோபா (சிவன்) மற்றும் அன்னபூர்ணீ தேவி போன்ற தெய்வங்களின் சிறு சிலைகளைப் போட்டு அதன் மீது ரொட்டி போன்றவற்றை வைத்து விடுமாறு கூறி அதை எடுத்துப் போய் துளசி செடியை மும்முறை சுற்றி பிரதர்ஷணம் செய்த பின் வந்திருந்த மக்களை வரிசையாக நிற்க வைத்து உணவு தருமாறு ராவாஜி தம்பதியினரிடம் கூறினார்.  என்ன அதிசயம் வந்திருந்த ஆயிரக்ககணக்கான பக்தர்கள் அனைவருக்கும் உணவு போடத் துவங்க அட்சய பாத்திரம் போல அந்த பாத்திரத்தில் இருந்து எடுக்க உணவு வந்தது. 50 பேர்களுக்கு சமைத்த உணவை எப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாப்பிட்டனர் என அந்த தம்பதியினர் வியந்தார்கள்.

1872 ஆம் ஆண்டு நடந்த இன்னொரு சம்பவம் இது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா நாசிக்கில் நடந்து கொண்டிருந்தது. அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளின் பக்தரான வாமன்புவா படோகர் என்பவர் திரயம்பகேஷ்வரில் ஒரு தேவி ஆலையத்திற்கு சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்தபின் தேவியின் மார்பில் இருந்த வெற்றிலை மாலையைத் தனக்கு தர முடியுமா என்று அர்ச்சகரிடம் கேட்டார். அந்த அர்சகருக்கு வந்து இருப்பவர் அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளின் பக்தர் என்பது தெரியும். ஆகவே கேலியாக அந்த ஆலைய அர்ச்சகர் கூறினார் ‘முடியுமானால் அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளின் சக்தியால் அதை எடுத்துக் கொள்’. அதைக் கேட்ட பக்தரின் மனம் துக்கம் அடைந்தது. ஆனால் அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் தன்னைக் கை விட மாட்டார் என நம்பி பக்தி பூர்வமாக அந்த இடத்திலேயே அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமியை வேண்டிக் கொள்ளத் துவங்கினார்.  அடுத்த சில கணங்களில் அந்த புரோகிதர் வெட்கி தலைக் குனியும்படி அந்த வெற்றிலை மாலை பறந்து வந்து அவர் கழுத்தில் விழுந்தது.

தன்னிடம் வருபவர்களது கடந்த, நிகழ்கால மற்றும் வரும் காலத்தை முற்றிலும் அறிந்தவர் ஸ்வாமிகள்.  ஒருமுறை மண்பாண்டம் செய்யும் குயவரான பாபா சாஹேப் என்ற பக்தர் ஸ்ரீ ஸ்வாமிகளை தரிசிக்க வந்தார்.  அவருடன் பேசிக் கொண்டு இருக்கையில் திடீர் என  ‘குயவா உனக்கு நேரம் வந்து விட்டது’  என ஸ்வாமிகள் கூற ஸ்வாமிகளுடைய வார்த்தைகளையும், அவற்றின் அர்த்தங்களையும்  முற்றிலும் புரிந்து கொணடவன், ஸ்ரீ ஸ்வாமிகளுடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதபடி இன்னும் சில நாட்கள் அவருக்கு பணிவிடை செய்ய தனக்கு உயிர் பிச்சைக் கொடுக்குமாறு  கேட்க, கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ  ஸ்வாமிகளும் ஆகாயத்தை நோக்கி கண்களுக்கு தெரியாத எவருடனோ பேசிய பின் எதிர் பக்கத்தில் ஓடிக் கொண்டு இருந்த மாட்டைக் காட்டி ‘இப்போது அதை எடுத்துக் கொள்’ எனக் கூற அந்த மாடு அங்கேயே செத்து விழுந்தது. இப்படியாக தற்காலிகமாக குயவனுக்கு பதில் மாட்டை பகவான் யமராஜரிடம் அனுப்பி அவனைக் காத்தார்.

அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் மானிக் நகருக்கு சென்று அங்கு இருந்த இன்னொரு தத்தாத்திரேய அவதாரமான ஸ்ரீ மானிக் பிரபுவை சந்தித்து ஆறு மாதங்கள் அங்கு தங்கி இருந்தாராம். ஸ்ரீ மானிக் பிரபுவை தனது சகோதரர் என்று கூறிக் கொண்ட அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள், அங்கிருந்த ஸ்ரீ மானிக் பிரபுவுடன் அத்தி மர தோட்டத்தில் மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் ஆன்மீக விஷயங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டு இருப்பார்களாம். இதை ஸ்ரீ மானிக் பிரபுவின் வாழ்க்கை வரலாறு தெரிவிக்கின்றது. 

தான் மறைய முடிவு செய்தவுடன் அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் மஹா சமாதியில் அமர்ந்து கொண்டு சமாதி அடைந்தார். அதற்கு முன்னர் தனது பக்தர்களிடம் தன் மறைவிற்கு யாரும் வருந்தக் கூடாது, கண்ணீர் விடக் கூடாது என்று கூறிவிட்டு தான் அங்குதான் கண்களுக்கு தெரியாமல் இருந்து கொண்டு பக்தர்களை காத்து வருவேன் என்றும் கூறினார்.  தனது பாதுகையை ஒரு பக்தருக்கு அளித்து விட்டு தன்னை உயிருடன் உள்ளபோது வணங்கித் துதிப்பது போல அதை வணங்கி வருமாறு கூறினாராம்.

 

Shri Samarth Swamiji

Santhipriya

Swami Shri Samarth fondly called by people as Akkalkot Shri Samarth Swami was spiritual master in Lord Dattathreya Tradition who lived during the nineteenth century. Akkalkot Shri Samarth Swami is widely considered to be the fourth incarnation of Lord Dattathreya and incarnated after the demise of Sree Narasimha Saraswathi, another spiritual master in the Dattathreya sect. Some believe that Akkalkot Shri Samarth Swami was incarnation of Shri Nrusimha Saraswathi Swamiji. 

His parentage and origins remain obscure similar to Shri Sai Baba of Shirdi and Shri Gajanan Maharaj of Shegaon both in Maharashtra. According to one legend, once when a disciple asked Akkalkot Shri Samarth Swami about his birth, Akkalkot Shri Samarth Swami told him that he had originated from a banyan tree.  

Some theories suggest that Shri Nrusimha Saraswathi  Swamiji, after helping and spiritually uplifting a large number of people went away to the Himalayas and remained in samadhi state of meditation for over three hundred years. With the passage of time a huge anthill grew over him covering him completely and none knew that he was inside the ant hill.   One day accidentally a woodcutter’s axe while cutting forest trees fell on the anthill inside the bushy area disturbing the meditation of Shri Nrusimha Saraswathi Swamiji who opened his eyes and casually came out of the anthill as if nothing had happened, but appeared in newer form as Akkalkot Shri Samarth Swami who calmly told the wood cutter that his time to resume his spiritual mission had come as per divine will.     

Akkalkot Shri Samarth Swami was first seen near Khandoba temple, Akkalkot in district Sholapur of Maharashtra. Before he reached Akkalkot he is believed to have visited Himalayas, China, Tibet, Nepal, Puri, Banaras, Hardwar, Girnar and Rameswaram.

He treated Muslims, Christians and other caste people alike. His kindness was always bestowed on the poor, needy and the downtrodden people.  He used to celebrate both Hindu and Muslim festivals like Dusshehra and Moharram etc. His miracles were many some of which are narrated below.

Once, on his visit to a place called Rampur, a devotee named Rawaji, cooked food for 50 people to celebrate the visit of Akkalkot Shri Samarth Swami. However, hearing the news of the arrival of Akkalkot Shri Samarth Swami hundreds of people from the neighboring villages arrived at the village. Seeing the huge gathering at his doorstep, Rawaji became panicky. Noticing it Akkalkot Shri Samarth Swami asked Rawaji to get two empty vessels. When the vessels were brought Akkalkot Shri Samarth Swami put two idols of Khandoba and Goddess Annapurna in them and asked the chapattis be piled over them. Rawaji and his wife were asked to carry these vessels and   circumambulate the thulsi tree thrice and then begin feeding people.  When food began to be served, Rawaji and his wife were amazed to see that the food vessel never exhausted even after several thousand people were served.  They could not understand how the food prepared for less than 50 people could be served for over thousand people.

In the year 1872, the Kumba Mela the grand function which used to be held every twelve years was performed in Nashik. One Shri Vamanbhuva Patokar, one of the disciples of Akkalkot Shri Samarth Swami visited Triambakeswar Devi temple and after performing pooja to the deity, requested the priest whether he could give to him the garland of betel leaves put around the neck of the deity. The priest who knew that the devotee was disciple of Akkalkot Shri Samarth Swami sarcastically suggested that he better take it with the powers of Akkalkot Shri Samarth Swami. Feeling insulted, the disciple when wholeheartedly prayed to Akkalkot Shri Samarth Swami, the garland instantly came flying from the neck of the deity and adorned the neck of the devotee who demanded it. The Priest felt humiliated and stood ashamed seeing the divine power of Swamiji.     

Akkalkot Shri Samarth Swami was able to read the past, present and future of those who visited him.  Once a potter named Baba Sahib, the disciple of Shri Swamiji came to meet him. While conversing, Swamiji suddenly commented that his time was over. The poor potter who knew the language and inner meaning of what Swamiji uttered fell in his feet, held it tightly pleading with him to save his life so that he could continue to serve him for some more time. Moved by his devotion Akkalkot Shri Samarth Swami looked-up towards the sky and muttered something as if he was speaking to someone invisible. Suddenly, he pointed out his hand towards a bull passing nearby and said in a loud voice ‘take it for now’ and the bull instantly fell dead. Thus Swamiji through his divine power temporarily halted the impending death of the potter for some more time.    

Akkalkot Shri Samarth Swami is also believed to have visited Manik Nagar to meet Shri Manik Prabhu, who was another incarnate of Lord Dattathreya and contemporary to Shri Samarth Swamiji. A reference is seen in the biography of Shri Manik Prabhu that Shri Samarth Swamiji claimed Shri Manik Prabhu as his brother and stayed with him for over six months in Manik Nagar. Most  of the time, the two divine personalities sat under a cluster fig tree (Audumbar) and  conversed for several hours on spirituality.  

One day Shri Samarth Swamigal indicated about his intention to disappear from the world and sat on Mahasamadhi telling his disciples that nobody should feel sorry and weep for his departure since he would continue to remain in Akkalkot in invisible form blessing the devotees. Before he attained samadhi he gave his slipper to one of his devotees and asked him to worship the same as if he was offering worship to him in physical form.